/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
முதியவரை வழிமறித்து மொபைல், நகை பறிப்பு
/
முதியவரை வழிமறித்து மொபைல், நகை பறிப்பு
ADDED : நவ 04, 2024 02:50 AM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த வல்லம் மலைக்கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகராஜ், 50. திருக்கழுகுன்றம் அடுத்த கீரப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு, சண்முகராஜை தொடர்பு கொண்ட நபர், தனது பெயர் ஜான்சன் என்றும், அவரிடம் படித்ததாகவும், தற்போது ஐ.டி., நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாகவும், புதிய கார் வாங்கியுள்ள காரை, தங்களிடம் காண்பிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இதையடுத்து, சண்முகராஜ், ஜான்சன் இருவரும், திருமணி சாலையில் காரில் சென்று கொண்டிருந்த போது, அவர்களை வழிமறித்த இரண்டு மர்ம நபர்கள், சண்முகராஜனை மிரட்டி, மொபைல் போன், 8 கிராம் தங்க மோதிரம் மற்றும் ஜிபே வாயிலாக, 10,000 ரூபாய் பணம் உள்ளிட்டவற்றை பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து, சண்முகராஜ் செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.