/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
முருங்கை நாற்று பண்ணை பயனின்றி வீணாகும் அவலம்
/
முருங்கை நாற்று பண்ணை பயனின்றி வீணாகும் அவலம்
ADDED : செப் 26, 2024 12:37 AM

சித்தாமூர்:சித்தாமூர் ஊராட்சியில், 1,000க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். விவசாயமே இப்பகுதிவாசிகளின் பிரதான தொழில்.
விவசாயிகளின் நலன் கருதி, கடந்த ஆறு மாதங்களுக்கு முன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில், 4.5 லட்சம் ரூபாய் மதிப்பில், சித்தாமூர் ஊராட்சிக்கு உட்பட்ட வாலோடை பகுதியில், முருங்கை நாற்றங்கால் பண்ணை கூடாரம் அமைக்கப்பட்டது.
தற்போது வரை பண்ணை செயல்படாமல், முருங்கை நாற்று உற்பத்தி பணி துவங்கவில்லை. இந்நிலையில், பண்ணையில் அமைக்கப்பட்ட பசுமை நிழல் வலைக் கூடாரம், பராமரிப்பின்றி கிழிந்து காற்றில் பறக்கிறது.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, நிழல் வலைக் கூடத்தை சீரமைத்து, பண்ணையில் முருங்கை நாற்று உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.