/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அம்மிக்கல் தலையில் போட்டு பெரும்பாக்கம் வாலிபர் கொலை
/
அம்மிக்கல் தலையில் போட்டு பெரும்பாக்கம் வாலிபர் கொலை
அம்மிக்கல் தலையில் போட்டு பெரும்பாக்கம் வாலிபர் கொலை
அம்மிக்கல் தலையில் போட்டு பெரும்பாக்கம் வாலிபர் கொலை
ADDED : செப் 20, 2024 12:20 AM

பெரும்பாக்கம்:பெரும்பாக்கம், எழில் நகர் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தைச் சேர்ந்தவர் கலைவாணன், 25. இவரது மனைவி சவுந்தர்யா, 25; மீன் மார்க்கெட் தொழிலாளர்கள்.
கலைவாணன், நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். இதை கண்டித்த சவுந்தர்யா, வீட்டின் வெளியே அவரை துாங்கும்படி கூற, வாசலில் படுத்து உறங்கியுள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு 1:00 மணிக்கு, கலைவாணனின் அலறல் சத்தம் கேட்டுள்ளது.
சவுந்தர்யா வெளியே வந்து பார்த்தபோது, ரத்த வெள்ளத்தில் கலைவாணன் உயிரிழந்து கிடந்தார். அருகே, அம்மிக்கல் கிடந்துள்ளது.
பெரும்பாக்கம் போலீசார் விசாரணையில் தெரிய வந்ததாவது:
எழில் நகரைச் சேர்ந்த கலைவாணனுக்கும், அதே குடியிருப்பில் மேல் வீட்டில் வசிக்கும் வசந்த், 21, என்பவரின் தாய் சரளாவுக்கும், அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இரவும், மது போதையில் இருந்த கலைவாணன், சரளா குறித்து அவதுாறாக பேசி உள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த சரளாவின் மகன் வசந்த், நண்பர்கள் தமிழ், சந்தோஷ், அருண் ஆகியோருடன் சேர்ந்து, கலைவாணன் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்து தப்பியது தெரியவந்தது.
தலைமறைவாக உள்ள வசந்த், தாய் உட்பட ஐந்து பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட கலைவாணன் மீது ஏழு வழக்குகள் உள்ளன.