/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலையோரம் கருங்கற்கள் அபாயத்தில் வாகன ஓட்டிகள்
/
சாலையோரம் கருங்கற்கள் அபாயத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : ஜன 29, 2024 04:18 AM

மதுராந்தகம், : மதுராந்தகம் பகுதி அம்பேத்கர் சிலை அருகே, சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சாலையோரம் உள்ள கருங்கற்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
கடந்த 20 தினங்களுக்கு முன், பெய்த கனமழையின் காரணமாக, மதுராந்தகம் ஏரிக்கரை பகுதி சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சென்னை செல்லும் மார்க்கத்தில் தண்ணீர் தேங்கி நின்றது.
தேங்கிய மழைநீரை வெளியேற்றும் வகையில், சாலையோரம் கால்வாய் அமைத்து, ஏரியிலிருந்து மதகு வழியாக நீர் செல்லும் பகுதியில் இணைப்பு ஏற்படுத்தி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
கால்வாய் அமைப்பதற்காக தோண்டி எடுக்கப்பட்ட மண் மற்றும் கருங்கற்கள், அப்புறப்படுத்தப்படாமல் சாலை ஓரம் குவிக்கப்பட்டது. இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.
ஒரே சமயத்தில் இரண்டு வாகனங்கள் செல்லும்போது, இருசக்கர வாகன ஓட்டிகள் வெள்ளைக் கோடு பகுதியில் ஒதுங்கிச் செல்ல முடியாத சூழல் உள்ளது.
எனவே, சாலையோரம் உள்ள மண் மற்றும் கருங்கற்களை, உரிய துறை சார்ந்த அதிகாரிகள் அப்புறப்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.