/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஜல்லி பெயர்ந்த ரயில்வே கடவு பாதை பொத்தேரியில் வாகன ஓட்டிகள் அவதி
/
ஜல்லி பெயர்ந்த ரயில்வே கடவு பாதை பொத்தேரியில் வாகன ஓட்டிகள் அவதி
ஜல்லி பெயர்ந்த ரயில்வே கடவு பாதை பொத்தேரியில் வாகன ஓட்டிகள் அவதி
ஜல்லி பெயர்ந்த ரயில்வே கடவு பாதை பொத்தேரியில் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஜன 07, 2025 06:52 AM

மறைமலைநகர் : பொத்தேரி ரயில்வே கடவுப்பாதை சாலை ஜல்லி பெயர்ந்து மோசமாக உள்ளதால், அடிக்கடி வாகனங்கள் பஞ்சராகி, வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
பொத்தேரி -- கோனாதி சாலை, 3 கி.மீ., துாரம் உடையது. இந்த சாலையை கோனாதி, காட்டுப்பாக்கம், காட்டாங்கொளத்துார், காவனுார் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
மறைமலைநகர், காட்டாங்கொளத்துார் பகுதிகளுக்கு, அடிப்படை தேவைகளுக்காக வந்து செல்கின்றனர்.
இந்த சாலையில், பொத்தேரி ரயில் நிலையம் அருகில், ரயில்வே தண்டவாள கடவுப்பாதை உள்ளது.
இந்த கடவுப்பாதையில், தண்டவாளங்கள் செல்லும் பகுதியில் சாலை பெயர்ந்து, ஜல்லி கற்கள் சிதறி உள்ளன.
வாகனங்கள் இதில் செல்லும் போது டயர்களில் குத்தி பஞ்சராகி நிற்கின்றன.
இது அடிக்கடி நடப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:
ரயில்வே கடவுப்பாதையை தினமும், ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள் கடந்து செல்கின்றன. இந்த பகுதி குண்டும் குழியுமாகி ஜல்லி கற்கள் பெயர்ந்து உள்ளதால், வாகன ஓட்டிகள் வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டியுள்ளது.
அடிக்கடி வாகனங்கள் பஞ்சராகின்றன. காலை மற்றும் மாலை நேரங்களில் அவசரமாக செல்லும் போது, வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழும் நிலை உள்ளது.
இந்த பள்ளங்களை சீரமைக்க, ரயில்வே துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.