/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை அரசு மருத்துவமனையில் பயன்பாட்டிற்கு வந்த 'எம்.ஆர்.ஐ., ஸ்கேன்'
/
செங்கை அரசு மருத்துவமனையில் பயன்பாட்டிற்கு வந்த 'எம்.ஆர்.ஐ., ஸ்கேன்'
செங்கை அரசு மருத்துவமனையில் பயன்பாட்டிற்கு வந்த 'எம்.ஆர்.ஐ., ஸ்கேன்'
செங்கை அரசு மருத்துவமனையில் பயன்பாட்டிற்கு வந்த 'எம்.ஆர்.ஐ., ஸ்கேன்'
ADDED : ஏப் 01, 2025 06:52 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், 'எம்.ஆர்.ஐ., ஸ்கேன்' பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதை, பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டில், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை உள்ளது.
இந்த மருத்துவமனையில் செங்கல்பட்டு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இம்மருத்துவமனையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், எம்.ஆர்.ஐ., ஸ்கேன் இயந்திரம் அமைக்கப்பட்டது. இந்த ஸ்கேன் இயந்திரம் அதிகமாக பயன்படுத்தப்பட்டதால், புதிய ஸ்கேன் இயந்திரம் அமைக்க வேண்டுமென, அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இதையடுத்து, மருத்துவமனைக்கு புதிதாக எம்.ஆர்.ஐ., ஸ்கேன் அமைக்க, 6 கோடியே 60 லட்சம் ரூபாய் நிதியை, அரசு ஒதுக்கீடு செய்தது.
மருத்துவமனையில் உள்ள அவரச சிகிச்சை பிரிவு பகுதியில், எம்.ஆர்.ஐ., ஸ்கேன் இயந்திரம் அமைக்கப்பட்டது. இதை கடந்த மாதம், 11ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தற்போது, 'ஸ்கேன்' எடுக்கும் பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. இந்த வசதியை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம் என, செங்கல்பட்டு மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.