/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வாரிசுகளுக்கு எம்.டி.சி., ரூ.45 லட்சம் உதவி
/
வாரிசுகளுக்கு எம்.டி.சி., ரூ.45 லட்சம் உதவி
ADDED : பிப் 18, 2025 11:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை மாநகர போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பணியின்போது இறந்தால், அவர்களின் வாரிசுக்கு நிவாரணம் வழங்கும் திட்டம், 2023 செப்டம்பரில் அமலுக்கு வந்தது.
இதற்காக, சக பணியார்களின் ஊதியத்தில் மாதம், 260 ரூபாய்க்கு மிகாத தொகை பிடித்தம் செய்யப்படுகிறது.
அந்த வகையில், சென்னை பல்லவன் இல்லத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், உயிரிழந்த ஆறு பணியாளர்களின் வாரிசுகளுக்கு, தலா, 7.50 லட்சம் ரூபாய் என, 45 லட்சம் ரூபாயை, எம்.டி.சி., நிர்வாக இயக்குநரான பிரபு சங்கர் நேற்று வழங்கினார்.

