/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பெண்ணை காதலித்து ஏமாற்றிய நங்கநல்லுார் வாலிபர் கைது
/
பெண்ணை காதலித்து ஏமாற்றிய நங்கநல்லுார் வாலிபர் கைது
பெண்ணை காதலித்து ஏமாற்றிய நங்கநல்லுார் வாலிபர் கைது
பெண்ணை காதலித்து ஏமாற்றிய நங்கநல்லுார் வாலிபர் கைது
ADDED : ஜூன் 22, 2025 11:07 PM

பரங்கிமலை:நங்கநல்லுார் பகுதியை சேர்ந்தவர் ரிஷி ஜோதிகுமார், 30. நீலாங்கரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், எக்ஸ்ரே டெக்னீசியனாக பணிபுரிந்தார்.
திருவான்மியூரை சேர்ந்த, 29 வயது பெண், பாலவாக்கத்தில் உள்ள ஒரு ஸ்கேன் மையத்தில், டெக்னீசியனாக பணிபுரிகிறார். இருவரும், 2022ம் ஆண்டு முதல் காதலித்துள்ளனர்.
கடந்த 2023ம் ஆண்டு, திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, ரிஷி ஜோதிகுமார் தன் வீட்டுக்கு அழைத்து சென்று, பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததாகவும், அதில் கருவுற்றதால் மாத்திரை கொடுத்து கலைத்ததாகவும் கூறப்படுகிறது.
அதன்பின், ரிஷி ஜோதிகுமார் பெண்ணிடம் பேசுவதை தவிர்த்துள்ளார். பின், வேறொரு பெண்ணையும் திருமணம் செய்துள்ளார்.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பெண், பரங்கிமலை மகளிர் போலீசில் புகார் அளித்தார். தீவிர விசாரணையில், பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியது தெரிந்தது.
இதையடுத்து, நேற்று ரிஷி ஜோதிகுமாரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.