/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வரும் 15ல் செங்கல்பட்டில் தேசிய தொழில் பழகுநர் முகாம்
/
வரும் 15ல் செங்கல்பட்டில் தேசிய தொழில் பழகுநர் முகாம்
வரும் 15ல் செங்கல்பட்டில் தேசிய தொழில் பழகுநர் முகாம்
வரும் 15ல் செங்கல்பட்டில் தேசிய தொழில் பழகுநர் முகாம்
ADDED : ஏப் 10, 2025 08:01 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டில், பிரதம மந்திரி தேசிய தொழில் பழகுநர் முகாம், வரும் 15ம் தேதி நடக்கிறது.
இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்ட அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் வாயிலாக, பிரதம மந்திரி தேசிய தொழில் பழகுநர் முகாம், செங்கல்பட்டு அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், வரும் 15ம் தேதி காலை 10:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை நடக்கிறது.
இம்முகாமில், தொழிற்பயிற்சி நிலையங்களில் பயின்று, தேர்வில் தேர்ச்சி பெற்ற பல்வேறு தொழிற்பிரிவைச் சேர்ந்த பயிற்சியாளர்கள், தொழில் பழகுநர் பயிற்சியில் இணைந்து, மத்திய அரசின் என்.ஏ.சி., சான்றிதழ் பெற்று பயனடையலாம்.
இந்த சான்றிதழ் பெற்றவர்களுக்கு, அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும், வயது வரம்பில் சலுகையும் உள்ளது. மாணவ, மாணவியர், இந்த முகாமில் கல்விச் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம்.
மேலும், விபரங்களுக்கு, மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனரை நேரிலோ அல்லது மின்னஞ்சல் (/dadskillcpt@gmail.co), வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம். 6379090205 - 044 27426554 ஆகிய எண்களிலும் தொடர்பு கொண்டு உரிய விபரங்களை பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.