/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தேசிய அளவிலான சிலம்பம் எண்ணுார் மாணவர்கள் சாம்பியன்
/
தேசிய அளவிலான சிலம்பம் எண்ணுார் மாணவர்கள் சாம்பியன்
தேசிய அளவிலான சிலம்பம் எண்ணுார் மாணவர்கள் சாம்பியன்
தேசிய அளவிலான சிலம்பம் எண்ணுார் மாணவர்கள் சாம்பியன்
ADDED : பிப் 14, 2024 11:23 PM

எண்ணுார்:புதுடெல்லி, முகேஷ் போர் மதர் கசானி கான்வென்ட் பள்ளி வளாகத்தில், கடந்த 9, 10, 11ம் தேதிகளில், 'ஸ்கூல் கேம்ஸ் அண்டு ஆக்டிவிட்டி டெவலெப்மென்ட் பவுண்டேஷன், இன்டர்நேஷனல் ஒலிம்பிக் கமிட்டி, மினிஸ்ட்ரி ஆப் யூத் அபெயர்ஸ் அண்டு ஸ்போர்ட் கவர்மென்ட் ஆப் இந்தியா' சார்பில், தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
இதில் யோகா, கராத்தே, கால்பந்து, கைப்பந்து, கபடி, தடகளம், ஹாக்கி மற்றும் சிலம்பம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
சிலம்பம் போட்டியில், தமிழகம் சார்பில் எண்ணுார், கே.கே.ஆர்., வடசென்னை தமிழர்களின் வீர சிலம்பம் கலைக்கூடம் மாணவர்கள், 12 பேர் பங்கேற்றனர்.
ஒற்றைக் கம்பு, இரட்டைக் கம்பு, தொடுமுறை போட்டிகளில், 10 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் நான்கு தங்கம், 14 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் ஆறு தங்கம், 17 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் இரண்டு தங்கம் என, 12 தங்கப் பதக்கம் வென்றனர்.
மேலும் சில பிரிவுகளில், நான்கு வெள்ளி பதக்கங்கள் வென்று, சிலம்பத்தில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினர்.
பதக்கங்களுடன் சாம்பியன் பட்டம் வென்று திரும்பிய எண்ணுார் மாணவர்களுக்கு, நேற்று காலை எண்ணுார் ரயில் நிலையத்தில், பயிற்சிப் பள்ளி ஆசான் கதிரவன், உறவினர்கள், பெற்றோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

