/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புத்திரன்கோட்டையில் திறக்காத புதிய அங்கன்வாடி மையம்
/
புத்திரன்கோட்டையில் திறக்காத புதிய அங்கன்வாடி மையம்
புத்திரன்கோட்டையில் திறக்காத புதிய அங்கன்வாடி மையம்
புத்திரன்கோட்டையில் திறக்காத புதிய அங்கன்வாடி மையம்
ADDED : ஜூலை 27, 2025 12:20 AM

சித்தாமூர்:புத்திரன்கோட்டையில் கட்டி முடிக்கப்பட்டு உள்ள அங்கன்வாடி மைய கட்டடத்தை திறக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
சித்தாமூர் அருகே புத்திரன்கோட்டை ஊராட்சியில் 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
ஊராட்சிக்கு உட்பட்ட அரசு பள்ளி அருகே செயல்படும் அங்கன்வாடி மையத்தில் 13 குழந்தைகள் படிக்கின்றனர்.
பழைய அங்கன்வாடி மைய கட்டடம் , 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதால் சேதடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்தது. இதனால் நுாலக கட்டடத்திற்கு அங்கன்வாடி மையம் மாற்றப்பட்டு, செயல்பட்டு வந்தது.
அங்கு போதிய இடவசதி மற்றும் அடிப்படை வசதி இல்லாமல் குழந்தைகள் அவதிப்பட்டனர்.இதனால், புதிய அங்கன்வாடி மைய கட்டடம் அமைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக குழந்தைகளின் பெற்றோர் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.
இந்நிலையில் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக 2021-22ல் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.
ஆனால் தற்போது வரை அங்கன்வாடி மைய கட்டடம் திறக்கப்படவில்லை. 'துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, புத்திரன்கோட்டையில் புதிய அங்கன்வாடி மைய கட்டடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.