/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு புது வாகனம்
/
செங்கை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு புது வாகனம்
ADDED : டிச 27, 2024 02:25 AM
செங்கல்பட்டு:செங்கல்பட்டில், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு, ஆறு புதிய வாகனங்களை, கலெக்டர் அருண்ராஜ் நேற்று வழங்கினார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் புனிததோமையார்மலை, லத்துார் ஆகிய ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாகனம் தலா இரண்டு, அச்சிறுப்பாக்கம், சித்தாமூர் ஆகிய ஊராட்சி ஒன்றியத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு தலா ஒரு வாகனம் என, ஆறு வாகனங்கள், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி, பழுதாகி நின்றன.
இந்த வாகனங்களை மாற்றி புதிய வாகனங்கள் வழங்க, ஊரக வளர்ச்சித்துறைக்கு, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் பரிந்துரை செய்யப்பட்டது.
அதன் பின், ஊரக வளர்ச்சித்துறையினரிடம், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும், புதிய வாகனங்களை, சென்னையில் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
செங்கல்பட்டு கலெக்டர் வளாகத்தில், ஆறு வட்டாட்சியர்களுக்கும் இந்த புதிய வாகனங்களை, கலெக்டர் அருண்ராஜ் நேற்று வழங்கினார்.