/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செய்தி எதிரொலி: மொலம்பாக்கம் பள்ளி எதிரே மழைநீர் கால்வாய் அமைப்பு
/
செய்தி எதிரொலி: மொலம்பாக்கம் பள்ளி எதிரே மழைநீர் கால்வாய் அமைப்பு
செய்தி எதிரொலி: மொலம்பாக்கம் பள்ளி எதிரே மழைநீர் கால்வாய் அமைப்பு
செய்தி எதிரொலி: மொலம்பாக்கம் பள்ளி எதிரே மழைநீர் கால்வாய் அமைப்பு
ADDED : அக் 24, 2024 12:25 AM

சித்தாமூர்,:சித்தாமூர் அருகே உள்ள பொலம்பாக்கம் ஊராட்சியில், 1,500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
அங்கு, திரவுபதி அம்மன் கோவில் அருகே, அரசு நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. இதில், 1 - 8ம் வகுப்பு வரை, 153 பேர் படித்து வருகின்றனர்.
பள்ளி எதிரே கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், குடியிருப்பு பகுதியில் உள்ள சாலை ஓரத்தில் தேங்கியது. அதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசி, நோய் தொற்று பரவும் அபாய நிலை ஏற்பட்டது.
மேலும், தேங்கிய கழிவுநீர் வாயிலாக அதிக அளவில் கொசு உற்பத்தியாகில், அப்பகுதிவாசிகள் அவதிப்படுகின்றனர் என, நம் நாளிதழில் கடந்த மாதம் 14ம் தேதி, படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.
அதன் விளைவாக, 15வது நிதிக்குழு மானியத்தின் கீழ், பள்ளி எதிரே 40 மீட்டர் நீளத்திற்கு வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளியின் சுற்றுப்புற பகுதியில், மழைநீர் தேங்குவது தவிர்க்கப்படும் என, அப்பகுதிவாசிகள் தெரிவித்தனர்.