/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செயல்படாத நீர்த்தேக்க தொட்டி; அம்பிகாநகரில் தண்ணீரின்றி தவிப்பு
/
செயல்படாத நீர்த்தேக்க தொட்டி; அம்பிகாநகரில் தண்ணீரின்றி தவிப்பு
செயல்படாத நீர்த்தேக்க தொட்டி; அம்பிகாநகரில் தண்ணீரின்றி தவிப்பு
செயல்படாத நீர்த்தேக்க தொட்டி; அம்பிகாநகரில் தண்ணீரின்றி தவிப்பு
ADDED : மார் 31, 2025 02:32 AM

சூணாம்பேடு:சூணாம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட ஆரவல்லிநகர் பகுதியில், 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி மக்களுக்கு ஏரிக்கரை அருகே உள்ள குடிநீர் கிணற்றில் இருந்து, மின்மோட்டார் வாயிலாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, பின் குழாய்கள் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இதில், அம்பிகா நகர் மற்றும் தொழுப்பேடு சாலையில் வசிக்கு மக்கள் பயன்பெறும் வகையில் மூன்று ஆண்டுகளுக்கு முன், 15வது நிதிக்குழு மானியத்தின் கீழ் 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.
ஆனால், குழாய் இணைப்புகள் ஏற்படுத்தப்படாமல் உள்ளதால், கடந்த இரண்டு ஆண்டுகளாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி செயல்படாமல், காட்சிப் பொருளாகவே உள்ளது.
தொட்டியை செயல்படுத்த பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை என, அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
கோடை காலம் துவங்கி உள்ள நிலையில், அம்பிகா நகர் மற்றும் தொழுப்பேடு சாலையில் வசிக்கும் 150 குடும்பங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் இப்பகுதி மக்களின் நலன் கருதி, குழாய் இணைப்புகள் ஏற்படுத்தி, புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.