/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பைக் மீது கார் மோதி விபத்து ஊரப்பாக்கத்தில் ஒருவர் பலி
/
பைக் மீது கார் மோதி விபத்து ஊரப்பாக்கத்தில் ஒருவர் பலி
பைக் மீது கார் மோதி விபத்து ஊரப்பாக்கத்தில் ஒருவர் பலி
பைக் மீது கார் மோதி விபத்து ஊரப்பாக்கத்தில் ஒருவர் பலி
ADDED : ஜூலை 15, 2025 07:28 PM
கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி அருகே, பைக் மீது கார் மோதிய விபத்தில், ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
நந்திவரம் -- கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கம், கார்த்திக் நகர் விரிவு பகுதியைச் சேர்ந்தவர் பாபு, 42. இதே பகுதியைச் சேர்ந்தவர் மதன், 45. இருவரும் நண்பர்கள்.
நேற்று முன்தினம் இரவு, ஊரப்பாக்கம் அருகே மதனின் மின்சார பைக் பழுதாகி உள்ளது.
அப்போது, மதன் தன் பைக் மீது அமர்ந்துகொள்ள, அதை தன் மின்சார பைக்கில் அமர்ந்து காலால் தள்ளியபடி பாபு வந்துள்ளார்.
இரவு 12:02 மணியளவில் ஊரப்பாக்கம், ஜி.எஸ்.டி., சாலை, இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகே வந்த போது, பின்னால் வந்த ஹூண்டாய் கார் இவர்கள் மீது மோதி, அருகே நின்ற 'மாருதி ஸ்விப்ட்' கார் மீதும் பயங்கரமாக மோதியது.
இதில், பாபு சம்பவ இடத்திலேயே பலியானார். மதன் தலையில், பலத்த காயம் ஏற்பட்டது.
தகவலறிந்த வந்த தாம்பரம் போக்குவரத்து போலீசார், உயிருக்குப் போராடிய மதனை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பலியான பாபுவின் உடல், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், ஹூண்டாய் கார் ஓட்டுநரான கடலுார் மாவட்டம், கூத்தப்பாக்கம், வள்ளலார் நகரைச் சேர்ந்த விமல், 21, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.