/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஊராட்சிகளில் மனை பிரிவு, கட்டடங்கள் ஆன்லைனில் விண்ணப்பிப்பது கட்டாயம்
/
ஊராட்சிகளில் மனை பிரிவு, கட்டடங்கள் ஆன்லைனில் விண்ணப்பிப்பது கட்டாயம்
ஊராட்சிகளில் மனை பிரிவு, கட்டடங்கள் ஆன்லைனில் விண்ணப்பிப்பது கட்டாயம்
ஊராட்சிகளில் மனை பிரிவு, கட்டடங்கள் ஆன்லைனில் விண்ணப்பிப்பது கட்டாயம்
ADDED : மே 15, 2025 09:15 PM
செங்கல்பட்டு:கிராம ஊராட்சிகளில் அமைக்கப்படும் மனைப் பிரிவுகள் மற்றும் கட்டப்படும் கட்டடங்களுக்கு, இணையதளம் வாயிலாக முறையாக அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்ட அறிக்கை:
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட, செங்கல்பட்டு மாவட்ட கிராம ஊராட்சிகளில் அமைக்கப்படும் மனைப் பிரிவுகள் மற்றும் கட்டப்படும் கட்டடங்களுக்கு, 'ஆன்லைன் பி.பி.ஏ., இணையதளம் வாயிலாக, முறையான அனுமதி பெறுதல் கட்டாயம்.
மேலும், அவற்றின் வாயிலாக வசூலிக்கப்படும் கட்டணத் தொகை வருவாய், கிராம ஊராட்சியின் வளர்ச்சி பணிகளுக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது.
மேற்படி மனைப்பிரிவு மற்றும் கட்டடங்களுக்கான அனுமதியை, பொதுமக்கள் எளிதில் பெறும் வகையில், 2023 அக்., 2ம் தேதி முதல், தமிழ்நாடு அரசின் வாயிலாக, ஒற்றை சாளர முறையிலான இணையதளமான https;//onlineppa.tn.gov.in கொண்டுவரப்பட்டு, இதன் வாயிலாக மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.
இதன்படி 2,500 சதுர அடி வரையிலான மனைப்பரப்பில், 3,500 சதுர அடி வரையிலான கட்டட பரப்பில் தரை அல்லது தரை மற்றும் முதல் தளம் கொண்ட குடியிருப்பு கட்டடம் கட்டுவதற்கு, உடனடி பதிவின் வாயிலாக உரிய கட்டணம் செலுத்திய சுய சான்று முறையில், இணையதளம் வாயிலாக அனுமதி அளிக்கப்படுகிறது.
மேலும், 2,500 - 10,000 சதுர அடிக்குள் கட்டப்படும் கட்டடங்களுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பம் செய்து, உரிய கட்டணங்கள் செலுத்திய பின், சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி வாயிலாக அனுமதி அளிக்கப்படுகிறது.
மேலும், 10,000 சதுர அடிக்கு மேற்பட்ட கட்டடங்களுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பம் செய்து, உரிய கட்டணங்கள் செலுத்திய பின் நகர, கிராம திட்டமிடல் இயக்குநரக மற்றும் சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி வாயிலாக அனுமதி வழங்கப்படுகிறது.
கிராம ஊராட்சிகளில், புதியதாக அமைக்கப்படும் மனைப் பிரிவுகளில் முறையான மின்கம்பங்கள், குடிநீர், வடிகால்வாய் ஆகிய அடிப்படை வசதிகள் இருத்தல் மற்றும் திறந்தவெளி நிலங்கள் சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சியின் பெயரில் பத்திர பதிவு செய்யப்பட வேண்டும். மனைப்பிரிவு, மற்றும் கட்டடங்களுக்கான அனுமதியை இணைய வழியில் மட்டுமே விண்ணப்பித்து, அனுமதி பெற வேண்டும்.
இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.