/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
முதல்வர் மருந்தகம் பணிகள் விரைந்து முடிக்க உத்தரவு
/
முதல்வர் மருந்தகம் பணிகள் விரைந்து முடிக்க உத்தரவு
முதல்வர் மருந்தகம் பணிகள் விரைந்து முடிக்க உத்தரவு
முதல்வர் மருந்தகம் பணிகள் விரைந்து முடிக்க உத்தரவு
ADDED : பிப் 20, 2025 11:57 PM

செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில், முதல்வர் மருந்தகம் அமைக்க உள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென, கூட்டுறவுத் துறை அதிகாரிகளுக்கு, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ராகுல்நாத் உத்தரவிட்டு உள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், கூட்டுறவு வேளாண்மை கடன் சங்கம் சார்பில், 15 முதல்வர் மருந்தகம், தனிநபர் தொழில் முனைவோர் 21 இடங்கள் என, 36 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் அமைய உள்ள இடங்களில், பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
முதல்வர் மருந்தகங்களை, வரும் 24ம் தேதி காணொலி காட்சி வாயிலாக, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். இதைத்தொடர்ந்து, செங்கல்பட்டு அடுத்த ஆத்துாரில் உள்ள, மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை வளாகத்தில், மாவட்ட மருந்து சேமிப்பு கிடங்கு மற்றும் முதல்வர் மருந்தகம் அமைக்கப்பட்டு உள்ளது.
இதை, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ராகுல்நாத், கலெக்டர் அருண்ராஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர். உடன், கூடுதல் கலெக்டர் நாராயணசர்மா, மாவட்ட மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் நந்தகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஆய்வுக்குப் பின், முதல்வர் மருந்தகங்கள் பணிகளை விரைந்து முடிக்க, கூட்டுறவுத்துறை அதிகாரிகளுக்கு, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ராகுல்நாத் உத்தரவிட்டார்.
அதன்பின், கலெக்டர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
செங்கல்பட்டு மாவட்ட தலைமை மருத்துவமனை, மருத்துவமனை, கலெக்டர் அலுவலகம், மக்கள் அதிகம் கூடும் இடங்களில், முதல்வர் மருந்தகங்கள் கூடுதலாக துவக்கப்படும்.
ஜெனரிக் மருந்துகள், சர்ஜிக்கல்ஸ் நியூட்ரா சூட், டிகல்ஸ், பிராண்டட் மருந்துகள் குறைந்த விலையில், பொதுமக்களுக்கு கிடைக்கும். இந்த மருந்தகங்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.