/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கோடை மழையால் சூணாம்பேடில் நெல் மூட்டைகள் நனைந்து நாசம்
/
கோடை மழையால் சூணாம்பேடில் நெல் மூட்டைகள் நனைந்து நாசம்
கோடை மழையால் சூணாம்பேடில் நெல் மூட்டைகள் நனைந்து நாசம்
கோடை மழையால் சூணாம்பேடில் நெல் மூட்டைகள் நனைந்து நாசம்
ADDED : மே 18, 2025 02:30 AM

சூணாம்பேடு:செய்யூர் மற்றம் சுற்றுவட்டாரப்பகுதியில் விவசாயமே பிரதான தொழிலாகும். இப்பகுதியில் 30,000க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவு விவசாய நிலத்தை கொண்டுள்ளது.
அதிகபடியாக சம்பா பருவத்தில் நெல் மற்றும் மணிலா விவசாயம் செய்யப்படுகிறது. சம்பா பருவத்தில் அக்., நவ., டிச., மாதத்தில் பயிரிடப்பட்ட நெல், விளைந்து அறுடைக்கு தயாராகி தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல்கொள்முதல் செய்ய, செய்யூர் மற்றும் மதுராந்தகம் வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் 86 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு செயல்படுகின்றன.
நேற்று பெய்த கோடை மழையால், சூணாம்பேடு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பாதுகாப்பு இல்லாமல் திறந்த வெளியில் வைக்கப்பட்டு இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நணைந்து நாசமாகின.
நுகர்பொருள் வாணிபர் கழகத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை உடனுக்குடன் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.