/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பம்மலில் சாலை, கழிவுநீர் பிரச்னை தீர்வு காணாததால் தொடரும் அவதி
/
பம்மலில் சாலை, கழிவுநீர் பிரச்னை தீர்வு காணாததால் தொடரும் அவதி
பம்மலில் சாலை, கழிவுநீர் பிரச்னை தீர்வு காணாததால் தொடரும் அவதி
பம்மலில் சாலை, கழிவுநீர் பிரச்னை தீர்வு காணாததால் தொடரும் அவதி
ADDED : மார் 16, 2025 02:09 AM

பம்மல்,:தாம்பரம் மாநகராட்சி, பம்மல் மண்டலம், ஆறாவது வார்டு, எல்.ஐ.சி., காலனி, நான்காவது குறுக்குத் தெருவில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இத்தெருவில், பாதாள சாக்கடை குழாய் பதிக்க பள்ளம் தோண்டினர். பணி முடிந்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகியும், இதுவரை சாலை அமைக்கப்படவில்லை.
குண்டும், குழியுமாக சாலை மாறியுள்ளதால், முதியோர், பெண்கள், சிறுவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தவிர, கழிவுநீர் கால்வாயை துார் வாருவதாக கூறி, மேற்பகுதியில் கான்கிரீட் கட்டமைப்பை பொக்லைன் இயந்திரத்தால் உடைத்தனர். ஆனால், முறையாக துார்வாரவும் இல்லை; மீண்டும் கான்கிரீட் கட்டமைப்பை ஏற்படுத்தவும் இல்லை. வழக்கம் போல், கால்வாய் முழுதும் துார்ந்து, கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
இதனால், கொசு தொல்லை பெருகிவிட்டது. குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டு, சாலையில் தண்ணீர் தேங்குகிறது.
இதுகுறித்து பல முறை புகார் தெரிவித்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. பம்மல் மண்டலத்தில் பெரும்பாலான தெருக்கள், இதே நிலையில் தான் உள்ளன.
இங்குள்ள அரசியல்வாதிகள் முதல் அதிகாரிகள் வரை, மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகளை நிறைவேற்றுவதில் அலட்சியமாக உள்ளனர்.
எனவே, மாநகராட்சி கமிஷனர் நேரடியாக ஆய்வு செய்து, மக்களின் குறைகளை தீர்க்க முன்வர வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.