/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மயங்கி விழுந்து ஊராட்சி செயலர் பலி
/
மயங்கி விழுந்து ஊராட்சி செயலர் பலி
ADDED : அக் 22, 2024 07:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர், : திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தில், திட்ட இயக்குனர் ஜெயக்குமார் தலைமையில் நேற்று மாலை, ஊராட்சி செயலர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
திருத்தணி வட்டம் மத்துார் ஊராட்சி செயலர் வெங்கடேசன், 57, என்பவர் கூட்ட அரங்கில் இருந்த போது, திடீரென்று மயங்கி விழுந்தார்.
இதையடுத்து அவரை, '108' ஆம்புலன்ஸ் வாயிலாக திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.