/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செய்யூர் கந்தசுவாமி திருக்கோவிலில் பங்குனி மூன்றாம் செவ்வாய் விமரிசை

ADDED : ஏப் 01, 2025 11:21 PM

செய்யூர்:செய்யூர் பஜார் பகுதியில் பழமை வாய்ந்த கந்தசுவாமி திருக்கோவில் உள்ளது.
10ம் நுாற்றாண்டில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டது. இக்கோவில் ஹிந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
இங்கு ஆடிக்கிருத்திகை, கந்த சஷ்டி, சூரசம்ஹாரம், புத்தாண்டு, கார்த்திகை தீபம், தைப்பூசம், பங்குனி உத்திர திருக்கல்யாணம், வைகாசி விசாகம் போன்ற விழாக்கள் விமரிசையாக கொண்டாடப்படுகின்றன.
பங்குனி மாதத்தின் அனைத்து செவ்வாய்கிழமைகளிலும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிவப்பு, வெள்ளை, பச்சை மற்றும் மஞ்சள் உள்ளிட்ட நிறங்களால் ஆன பொருட்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்படுவது வழக்கம்.
நேற்று பங்குனி மூன்றாம் செவ்வாயை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மருகு
வில்வம், நொச்சி, திருநீறு பத்திரி, பன்னீர் இலை, மருதாணி பூ, கொடி சம்பங்கி பூ போன்ற பச்சை நிற பொருட்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.
இதில், செய்யூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, தரிசனம் செய்தனர்.