/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரூ.ஒரு கோடியில் பூங்கா சீரமைப்பு
/
ரூ.ஒரு கோடியில் பூங்கா சீரமைப்பு
ADDED : நவ 29, 2024 12:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லாவரம்,
பல்லாவரம் சட்டசபை தொகுதி தாம்பரம் மாநகராட்சி, 2வது மண்டலத்தில், திருத்தணி நகர், பல்லவா கார்டன், அசோகா பார்க் ஆகிய இடங்களில் பூங்காக்கள் உள்ளன. இவை, முறையாக பராமரிக்கப்படவில்லை.
இந்த பூங்காக்களை சீரமைத்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, இப்பூங்காக்களை சீரமைக்க, ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து, அதற்கான பணிகளை, பல்லாவரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., கருணாநிதி, நேற்று துவக்கி வைத்தார்.