/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புகார் பெட்டி உணவகத்தில் உடைந்துள்ள 'சிலாப்' பேருந்து பயணியர் அச்சம்

ADDED : டிச 31, 2024 01:00 AM

செங்கல்பட்டு மாவட்டம், மாமண்டூர் ஜி.எஸ்.டி., சாலையில், உணவு நிறுத்த பேருந்து நிலையம் உள்ளது.
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளும், தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் பேருந்துகளும் உணவு இடைவெளிக்காக, இந்த பேருந்து நிலையத்தில் நிறுத்தப்படும்.
அரசு பேருந்துகள் மட்டுமின்றி, தனியார் ஆம்னி பேருந்துகளும் இந்த உணவகத்திற்குள் வந்து செல்கின்றன.
இந்த பேருந்து நிலையத்தில், சுகாதாரமற்ற நிலையில் கழிவுநீர் தேங்கி, குப்பை அகற்றப்படாமல் உள்ளது. மேலும், கழிவுநீர் கால்வாய் 'சிலாப்'கள் உடைந்துள்ளன.
இரவு நேரத்தில் பயணியர் செல்லும் போது, இந்த கழிவுநீர் கால்வாயில் விழும் ஆபத்து உள்ளது.
சுகாதாரமற்ற நிலையில் உள்ள இந்த பேருந்து நிலையத்தை சீரமைக்க வேண்டும். கழிவுநீர் கால்வாய் சிலாப்களை மாற்றி, புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.முரளிதரன்,
செங்கல்பட்டு.