/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
காத்தாங்கடையில் பஸ் நிழற்குடை அமைக்க பயணியர் வலியுறுத்தல்
/
காத்தாங்கடையில் பஸ் நிழற்குடை அமைக்க பயணியர் வலியுறுத்தல்
காத்தாங்கடையில் பஸ் நிழற்குடை அமைக்க பயணியர் வலியுறுத்தல்
காத்தாங்கடையில் பஸ் நிழற்குடை அமைக்க பயணியர் வலியுறுத்தல்
ADDED : ஜன 11, 2025 01:42 AM

கூவத்துார்:கூவத்துார் அடுத்த காத்தாங்கடை பகுதி கிழக்கு கடற்கரை சாலையில், பேருந்து நிறுத்தம் உள்ளது.
இது கடலுார், அணைக்கட்டு, சோழக்கட்டு, வேப்பஞ்சேரி போன்ற 10க்கும் மேற்பட்ட கிராம மக்களின் பிரதான பேருந்து நிறுத்தமாக உள்ளது.
சென்னை, புதுச்சேரி போன்ற இடங்களுக்குச் செல்பவர்கள், பள்ளி கல்லுாரிகளுக்குச் செல்லும் மாணவ - மாணவியர், தினசரி காத்தாங்கடை பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில், பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை வசதி இல்லாத காரணத்தால், வெயில் காலத்தில் முதியவர்கள் நீண்ட நேரம் வெயிலில் காத்திருக்கின்றனர். இதனால் கால்வலி, மயக்கம் ஏற்பட்டு அவதிப்படுகின்றனர். மழைக் காலத்தில், மழையில் நனைந்தபடி பேருந்திற்காக காத்திருக்க வேண்டியுள்ளது.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, காத்தாங்கடை பகுதியில் பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பேருந்து பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.