/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கண்ணாடி விரியன், நல்லபாம்பு பிடிக்க இருளர் மக்களுக்கு அனுமதி
/
கண்ணாடி விரியன், நல்லபாம்பு பிடிக்க இருளர் மக்களுக்கு அனுமதி
கண்ணாடி விரியன், நல்லபாம்பு பிடிக்க இருளர் மக்களுக்கு அனுமதி
கண்ணாடி விரியன், நல்லபாம்பு பிடிக்க இருளர் மக்களுக்கு அனுமதி
ADDED : டிச 16, 2024 02:20 AM
மாமல்லபுரம்:செங்கல்பட்டு இருளர்கள் நல்லபாம்பு, கண்ணாடி விரியன் ஆகிய வகைகளில், 4,500 பாம்புகள் பிடிக்க, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தமிழக தொழில் மற்றும் வணிக துறையின்கீழ், மாமல்லபுரம் அடுத்த, வடநெம்மேலி பகுதியில், இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கம், கடந்த 1978 முதல் இயங்குகிறது.
செங்கல்பட்டு மாவட்ட பகுதி இருளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். நல்லபாம்பு, கண்ணாடிவிரியன், கட்டுவிரியன், சுருட்டை ஆகிய பாம்புகளை, அவர்கள் வனப்பகுதியிலிருந்து பிடித்து, சங்கத்தில் ஒப்படைப்பர். பாம்பின் வகைக்கேற்ப, அதை அளித்தவருக்கு சன்மான தொகை அளிக்கப்படும்.
பாம்பிலிருந்து விஷம் பிரித்து எடுத்து, பாம்புக்கடி விஷமுறிவு மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு விற்கப்படும். ஒவ்வொரு ஆண்டும், கட்டுவிரியன், சுருட்டை ஆகிய பாம்புகளை குறிப்பிட்ட எண்ணிக்கையில் பிடிக்க, தமிழக அரசு அனுமதி வழங்கும்.
நல்லபாம்பு, கண்ணாடிவிரியன் ஆகிய பாம்புகளை பிடிக்க, மத்திய அரசு அனுமதி வழங்கும். மத்திய அரசு அனுமதி நவ.,க்குள் அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தாமதமானது.
தமிழக அரசு அனுமதித்த பாம்புகளை மட்டுமே, கடந்த சில மாதங்களாக பிடித்து வருகின்றனர். தற்போது மத்திய அரசு அனுமதி வழங்கி, சங்க நிர்வாகத்திடம் அனுமதி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சங்க நிர்வாகத்தினர் கூறும்போது, 'மூன்றாயிரம் நல்லபாம்புகள், 1,500 கண்ணாடிவிரியன் பாம்புகள் பிடிக்க, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது' என்றனர்.
இருளர்கள் கூறும்போது, 'நல்லபாம்பு, கண்ணாடிவிரியன் ஆகிய பாம்புகளை பிடித்தால், எங்களுக்கு அதிகதொகை கிடைக்கும். 20ம் தேதி முதல், இந்த பாம்புகளை பிடிக்க முடிவெடுத்துள்ளோம்' என்றனர்.

