/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலையில் தேங்கும் மழைநீரால் புதுப்பட்டினம் மக்கள் அவதி
/
சாலையில் தேங்கும் மழைநீரால் புதுப்பட்டினம் மக்கள் அவதி
சாலையில் தேங்கும் மழைநீரால் புதுப்பட்டினம் மக்கள் அவதி
சாலையில் தேங்கும் மழைநீரால் புதுப்பட்டினம் மக்கள் அவதி
ADDED : நவ 19, 2025 04:55 AM

புதுப்பட்டினம்: புதுப்பட்டினம் பிரதான சாலையில், மழைநீர் தேங்கி, மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
கல்பாக்கம் அடுத்த, புதுப்பட்டினம் பகுதியில், பழைய கிழக்கு கடற்கரை சாலை கடக்கிறது. இச்சாலை பகுதி முக்கிய வணிக இடமாக அமைந்துள்ள நிலையில், பல்வேறு கடைகள் நிறைந்துள்ளன.
அணுசக்தி துறை கல்பாக்கம் பகுதியினர் மற்றும் சுற்றுபுற பகுதியினர், பொருட்கள் வாங்குவதற்கு கடைகளுக்கும், பிற இடம் செல்வோர் பேருந்திற்காகவும், இப்பகுதிக்கு வருகின்றனர்.
பத்து ஆண்டுகளுக்கு முன், இப்பகுதி சாலையில் மழைநீர் தேங்காது. கடந்த 2015ல் குறிப்பிட்ட பகுதி வரை மையதடுப்புடன் மேம்படுத்தப்பட்டது.
அப்பகுதி சற்று வளைவாக உள்ளதால், சாலையின் கிழக்கு பகுதி உயர்ந்தும், மேற்கு பகுதி தாழ்வாகவும் அமைந்தது.
அதைத்தொடர்ந்து, மழையின்போது தாழ்வு பகுதியில், மழைநீர் குளம்போல் தேங்குகிறது. 100 மீ., நீளத்திற்கும் மேல் சாலையில், கடைகளுக்கு முன்புறம் தேங்கி, பல நாட்கள் வரை வடிவதில்லை.
கடைகளுக்கு செல்வோர் சேற்று சகதியில் கடந்து அவதிப்படுகின்றனர். மழைநீரால் வியாபாரம் தடைபட்டு வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர்.
அப்பகுதி பேருந்து நிறுத்தமாகவும் உள்ளதால், பேருந்தில் இருந்து இறங்கும், ஏறும் பயணியர், மழைநீரில் நடந்து அவதிக்குள்ளாகின்றனர்.
வேகமாக செல்லும் வாகனங்கள் அங்குள்ளவர்கள் மீதும், கடைகளிலும் சேற்று நீரை இறைக்கிறது. மின்மாற்றியையும் மழைநீர் சூழ்ந்து மின்கசிவு அபாயமும் உள்ளது.
மழைநீர் வெளியேறுவதற்காக வடிகால்வாய் கட்டுமாறு, இப்பகுதியினர் தொடர்ந்து வலியுறுத்தியும், அரசுத் துறையினர் அலட்சியப்படுத்துகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

