/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கீரப்பாக்கம் வாழ்வியல் குடியிருப்பில் மாற்றுத்திறனாளிகள் சேவை முகாம்

ADDED : நவ 19, 2025 04:56 AM

கூடுவாஞ்சேரி: கீரப்பாக்கம் நகர்ப்புற வாழ்வியல் அடுக்குமாடி குடியிருப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை முகாம் நேற்று நடைபெற்றது.
வண்டலுார் அடுத்த கீரப்பாக்கம் ஊராட்சி, 4-வது வார்டு, விநாயகபுரத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், 1,760 வீடுகள் உள்ளன.
இங்குள்ள சமுதாய கூடத்தில், பம்மல் அன்னை தெரசா மாற்றுத்திறனாளிகள் நல அறக்கட்டளை சார்பில் சேவை மற்றும் மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது.
இதில், மாற்றுத்திறனாளிகள், முதியோர், கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் பெற்றோரை இழந்த பள்ளி மாணவர்களுக்கு உதவித் தொகையும், மாற்றுத்திறனாளிகளுக்கு வேண்டிய உபகரணங்களும் வழங்கப்பட்டன.
தவிர, 300-க்கும் மேற்பட்டோருக்கு காது, மூக்கு, தொண்டையில் ஏற்பட்டிருந்த பாதிப்புகளுக்கு சோதனை நடத்தப்பட்டு, மருந்துகளும் வழங்கப்பட்டன.