/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கிளியாற்று பாலத்தில் மரக்கன்று பாலம் சேதம் அடையும் அபாயம்
/
கிளியாற்று பாலத்தில் மரக்கன்று பாலம் சேதம் அடையும் அபாயம்
கிளியாற்று பாலத்தில் மரக்கன்று பாலம் சேதம் அடையும் அபாயம்
கிளியாற்று பாலத்தில் மரக்கன்று பாலம் சேதம் அடையும் அபாயம்
ADDED : நவ 19, 2025 04:57 AM

மதுராந்தகம்: மதுராந்தகம் கிளியாற்று பாலத்தின் இணைப்புகளில் மரக்கன்றுகள் வளர்வதால், பாலம் சேதம் அடையும் அபாயம் உள்ளது.
மதுராந்தகம் அருகே கிளியாறு பகுதியில், சென்னை -- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. கிளியாறை கடக்கும் வகையில், தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலத்தின் இணைப்புகளில் மரக்கன்றுகள் வளர்ந்து இருந்தன.
அவ்வப்போது, தேசிய நெடுஞ்சாலைத் துறையினரால் மரக்கன்றுகள் வேருடன் அகற்றப்படாமல், கிளைகள் மட்டும் வெட்டி அகற்றப்பட்டன.
இதனால், மீண்டும் அவை துளிர்விட்டு வளர தொடங்கின. தற்போது, வேர் பகுதிகள் பலம் பெற்று, பாலம் சேதமடையும் நிலையில் உள்ளது.
எனவே, தேசிய நெடுஞ்சாலைத் துறையினர், பாலத்தின் இணைப்பு பகுதிகளில் வளர்ந்துள்ள, 10க்கும் மேற்பட்ட மரக் கன்றுகளை வேருடன் வெட்டி அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.