/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஜி.எஸ்.டி., சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் மக்கள் அவதி
/
ஜி.எஸ்.டி., சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் மக்கள் அவதி
ஜி.எஸ்.டி., சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் மக்கள் அவதி
ஜி.எஸ்.டி., சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் மக்கள் அவதி
ADDED : நவ 19, 2025 04:55 AM

மறைமலை நகர்: சிங்கபெருமாள் கோவில் ஜி.எஸ்.டி., சாலையில் தேங்கும் கழிவுநீரால் மக்கள் அவதிபடுகின்றனர்.
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சிங்கபெருமாள் கோவில் ஊராட்சி, சென்னை புறநகர் பகுதிகளில் வேகமாக வளர்ந்து வரும் ஊராட்சிகளில் ஒன்று. இங்கு 20,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளுக்கு வந்து செல்கின்றனர்.
இங்கு ஜி.எஸ்.டி., சாலையின் இரு மார்க்கங்களிலும் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் சாலையில் கழிவுநீர் பல மாதங்களாக வழிந்து ஓடுகிறது.
இதனால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே கழிவுநீரை அகற்ற உள்ளாட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.