/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பெரும்பாக்கத்தில் காலிமனைகளில் கழிவுநீர், குப்பையால் மக்கள் தவிப்பு
/
பெரும்பாக்கத்தில் காலிமனைகளில் கழிவுநீர், குப்பையால் மக்கள் தவிப்பு
பெரும்பாக்கத்தில் காலிமனைகளில் கழிவுநீர், குப்பையால் மக்கள் தவிப்பு
பெரும்பாக்கத்தில் காலிமனைகளில் கழிவுநீர், குப்பையால் மக்கள் தவிப்பு
ADDED : டிச 09, 2024 02:55 AM

பெரும்பாக்கம்,:பெரும்பாக்கம் ஊராட்சி மன்ற வளாகம், காலிமனையில் தேங்கியுள்ள கழிவுநீர், குப்பையால் சுற்று வட்டாரப் பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
சென்னை, பெரும்பாக்கம் ஊராட்சியில், 40க்கும் மேற்பட்ட நகர்கள் உள்ளன. 75,000 பேர் வசிக்கின்றனர். ராஜிவ்காந்தி சாலையில் ஐ.டி., நிறுவனங்களின் வருகையால், கடந்த 10 ஆண்டுகளில் குடியிருப்புகள், மக்கள் தொகை இருமடங்காக உயர்ந்துள்ளது.
இதனால், தினமும், 18 டன் குப்பை சேகரமாகின்றன. ஊராட்சியில் சேகரமாகும் குப்பையை, அலுவலகம் பின்புறம் உள்ள வளாகத்தில் கொட்டப்பட்டு, அங்கிருந்து ஒரகடம், கொளத்துார் கொண்டு செல்லப்படுகிறது.
இந்த குப்பை வளாகம் வீராத்தம்மன் கோவில் சாலையில் அமைந்துள்ளது. பெரும்பாக்கம், நுாக்கம்பளையம், ஒட்டியம்பாக்கம் ஆகிய பகுதிகளில் இருந்து பள்ளிக்கரணை செல்லும் பிரதான சாலையாக இது விளங்குகிறது. இச்சாலையில் தினசரி ஆயிரக்கணக்கான இரு, நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன.
சமீப காலமாக ஊராட்சி வளாத்தில் பொதுமக்கள் குப்பை வீசி செல்கின்றனர். சுற்றுவட்டார பகுதி வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அங்குள்ள காலிமனையில் விடப்படுகிறது. தற்போது, மழைநீர் கழிவுநீருடன் சேர்ந்து அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுகிறது.
இதனால், பிரபுநகர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் சுகாதார சீர்கேட்டால் தவித்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஊராட்சி வளாகத்தை துாய்மைப்படுத்தவும், காலி மனையில் சேகரமாகியுள்ள கழிவுநீர் கலந்த மழைநீரை அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.