/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பொறியாளர் தற்கொலைக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி மனு
/
பொறியாளர் தற்கொலைக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி மனு
பொறியாளர் தற்கொலைக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி மனு
பொறியாளர் தற்கொலைக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி மனு
ADDED : நவ 24, 2025 03:43 AM

மேடவாக்கம்: தாம்பரம் போக்குவரத்து பணிமனையில், இளம்பொறியாளராக பணிபுரிந்த யுவராஜ் என்பவர், சில தினங்களுக்கு முன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து உயிரிழந்தார்.
இவரின் தற்கொலைக்கு காரணமான போக்குவரத்து அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, தமிழ்நாடு பாரதிய போக்குவரத்து தொழிலாளர் பேரவை எனும் சங்கம், அரசு போக்குவரத்து துறை முதன்மை செயலருக்கு புகார் மனு அனுப்பியுள்ளது.
புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
இளம்பொறியாளர் யுவராஜ், கழுத்து வலி காரணமாக பணி செய்ய இயலாத நிலையில், கடந்த ஆக., 12ம் தேதி முதல், மருத்துவ விடுப்பு கேட்டு அனுப்பிய மருத்துவ சிகிச்சை சான்று மற்றும் முன்னனுமதி கோரும் விண்ணப்பத்தை நிராகரித்து, தாம்பரம் பணிமனை கிளை மேலாளர் திருப்பி அனுப்பியுள்ளார்.
மனித வளமேம்பாடு அதிகாரியும் அதை பரிசீலனை செய்யாததோடு, பணிக்கு வரவில்லை எனக்கூறி, மூன்று மாத சம்பளத்தை தராமல் நிறுத்தி வைத்துள்ளார்.
உடல்நிலை சரியில்லாத அவருக்கு பொருளாதார இழப்பு ஏற்படும் வகையில் ஊதியம் கிடைக்கப்பெறாமல் செய்ததாலேயே, மன உளைச்சலில் தற்கொலை செய்துள்ளார்.
பெரம்பூர் பணிமனை முதுநிலை பொறியாளர் நாகராஜன் இறந்த சில மாதங்களில், யுவராஜ் இறந்துள்ளார். எனவே, பணிச்சுமை அதிகரித்து, மன உளைச்சலை ஏற்படுத்தி தற்கொலைக்கு துாண்டிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

