/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தொன்னாடு மயான பாதைக்கு நிலம் கையகப்படுத்த மனு
/
தொன்னாடு மயான பாதைக்கு நிலம் கையகப்படுத்த மனு
ADDED : நவ 05, 2024 11:33 PM

மதுராந்தகம்:மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்டு, தொன்னாடு ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில், 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இக்கிராமத்தில், 216/7ல், 13.5 சென்ட் மயான புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த ஊராட்சியில், இறுதி சடங்கு செய்ய, மயானத்திற்கு செல்ல சாலை வசதி இல்லை.
இதனால், கிராமம் உருவான காலத்தில் இருந்து, தனியாருக்கு சொந்தமான நிலத்தின் வழியாக, இறந்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய, மயானத்திற்கு ஆட்கள் தோளில் சுமந்து செல்கின்றனர்.
தனியார் நிலத்தில் விவசாயம் செய்யப்பட்டுள்ளதால், விவசாய பயிர்களை மிதித்து நடந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது. மழைக்காலங்களில் நீர்நிலை பகுதியியை கடந்து செல்கின்றனர்.
எனவே, தனியாருக்கு சொந்தமான நிலத்தில் 157 மீட்டரும், நீர்நிலை புறம்போக்கு பகுதியில் 23 மீட்டரும் என, மயானத்திற்கு செல்ல பாதை அமைக்கும் வகையில், 15 அடி அகலத்திற்கு, அரசு கையகப்படுத்தி தரவும், சிமென்ட் சாலை அமைத்து தரவும் வேண்டுமென, கிராமவாசிகள் நேற்று, மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் தியாகராஜனை சந்தித்து மனு அளித்தனர்.
மனுவைப் பெற்றுக் கொண்ட வருவாய் கோட்டாட்சியர் தியாகராஜன், இது குறித்து விசாரித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக, கிராம மக்களிடம் உறுதியளித்தார்.