/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நெடுஞ்சாலை இரும்பு தடுப்புகளில் போஸ்டர் ஒட்டப்படுவதால் ஆபத்து
/
நெடுஞ்சாலை இரும்பு தடுப்புகளில் போஸ்டர் ஒட்டப்படுவதால் ஆபத்து
நெடுஞ்சாலை இரும்பு தடுப்புகளில் போஸ்டர் ஒட்டப்படுவதால் ஆபத்து
நெடுஞ்சாலை இரும்பு தடுப்புகளில் போஸ்டர் ஒட்டப்படுவதால் ஆபத்து
ADDED : நவ 09, 2024 12:39 AM

மறைமலை நகர்:செங்கல்பட்டு மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள காஞ்சிபுரம் - செங்கல்பட்டு நெடுஞ்சாலை, ஜி.எஸ்.டி., சாலை, சிங்கபெருமாள் கோவில் - ஸ்ரீபெரும்புதுார் சாலைகளில், முக்கிய சந்திப்புகள், கடவுப்பாதைகளில் விபத்துகளை தடுக்க, போக்குவரத்து போலீசார் சார்பில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
இரும்பாலான தடுப்பு இருப்பது, வாகன ஓட்டிகளுக்கு இரவு நேரங்களில் தெரியும் வகையில், இரவில் ஒளிரும் பட்டைகளும், அதில் அமைக்கப்பட்டு உள்ளன.
இதன் காரணமாக, குறிப்பட்ட பகுதிகளில் வாகனங்களின் வேகம் கட்டுப்படுத்தப்பட்டன. இந்நிலையில், இந்த தடுப்புகளில் தொடர்ந்து கண்ணீர் அஞ்சலி, பிறந்தநாள் வாழ்த்து, திருமண விழா போன்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.
அதனால், ஒளிரும் பட்டைகள் மங்கலாகி, தடுப்பு இருப்பது தெரிவதில்லை. எனவே, இதில் உள்ள போஸ்டர்களை அகற்றவும், மீண்டும் போஸ்டர்கள் ஒட்டுவோர் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.