sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கை புறநகர் பேருந்து நிலையம் திறக்க ஏற்பாடு...ஜூலையில்!: ஏரி மண்ணிற்கு கனிமவள துறை அனுமதி கிடைக்குமா?

/

செங்கை புறநகர் பேருந்து நிலையம் திறக்க ஏற்பாடு...ஜூலையில்!: ஏரி மண்ணிற்கு கனிமவள துறை அனுமதி கிடைக்குமா?

செங்கை புறநகர் பேருந்து நிலையம் திறக்க ஏற்பாடு...ஜூலையில்!: ஏரி மண்ணிற்கு கனிமவள துறை அனுமதி கிடைக்குமா?

செங்கை புறநகர் பேருந்து நிலையம் திறக்க ஏற்பாடு...ஜூலையில்!: ஏரி மண்ணிற்கு கனிமவள துறை அனுமதி கிடைக்குமா?


ADDED : நவ 10, 2024 01:46 AM

Google News

ADDED : நவ 10, 2024 01:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு,:மலையடி வேண்பாக்கம் கிராமத்தில், செங்கல்பட்டு புதிய புறநகர் பேருந்து நிலைய பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. வரும் ஜூலை மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்வரப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். பேருந்து நிலையத்திற்கு, ஏரிகளில் இருந்து மண் எடுக்க, கனிமவளத் துறையிடம், ஒப்பந்ததாரர்கள் அனுமதி கோரி உள்ளனர்.

செங்கல்பட்டு நகராட்சி பகுதியில் புதிய பேருந்து நிலையம் அருகே, மேற்பார்வை மின்வாரிய அலுவலகம், அரசு போக்குவரத்து கழகம், ஆகியவை அமைந்துள்ளன.

இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

மேலும், திருமணம், விழாக்காலங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதை தவிர்க்க, புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என, அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதையடுத்து, ஆலப்பாக்கம் ஊராட்சி மலையடிவேண்பாக்கம் கிராமத்தில் அரசு மருத்துவக் கல்லுாரிக்கு சொந்தமான 9.95 ஏக்கர் நிலத்தில், செங்கல்பட்டு புதிய புறநகர் பேருந்து நிலையம், அரசு போக்குவரத்து கழக பணிமனை அமைக்க, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதன்பின், செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அமைக்க, 97 கோடி ரூபாய் மதிப்பிட்டில் 'டெண்டர்' விடப்பட்டது. புதிய பேருந்து நிலைய பணியை கடந்தாண்டு நவ., மாதம் முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.

இங்கு, புதிய பேருந்து நிலையம், கடைகள், போக்குவரத்து பணிமனை கட்டடங்கள் கட்டுமான பணி, கடந்த ஜூலை மாதத்தில் துவங்கி நடைபெற்று வருகின்றன.

இதில், போக்குவரத்து கழக பணிமனை, கடைகள் கட்டுமான பணி, நடைமேடைகள் அமைக்கும் பணி உள்ளிட்டவை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இது ஒருபுறம் இருக்க, பேருந்து நிலையத்தில் உள்ள பள்ளங்களை தரைமட்டத்தில் இருந்து, 16 அடி உயர்த்துவதற்கு மண் தேவைப்படுகிறது.

இதனால், ஏரிகளில் இருந்து மண் எடுக்க, கனிமவளத் துறையிடம், ஒப்பந்ததாரர்கள் அனுமதி கோரியுள்ளனர். அனுமதி கிடைத்தவுடன், தரைமட்டத்தில் இருந்து மண் கொட்டி உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுப்பட உள்ளது.

இப்பணிகளை சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க, ஒப்பந்ததார்ரகளுக்கு உத்தரவிட்டனர். தற்போது, பேருந்து நிலைய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

புதிய பேருந்து நிலைய பணிகள், 45 சதவீதம் முடிந்துள்ளது. மற்ற பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வரும் ஜூலை மாதத்திற்குள் பணிகளை முடித்து, பேருந்து நிலையத்தை திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

சி.எம்.டி.ஏ., அதிகாரிகள்,

சென்னை.

மாமல்லை பஸ் நிலைய பணி


சி.எம்.டி.ஏ., அதிகாரி ஆய்வுமாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவில் முன்புறம் உள்ள திறந்தவெளி பகுதியே, நீண்டகாலமாக பேருந்து நிலையமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. புதிய பேருந்து நிலையம் அமைக்க திட்டமிட்டும், 32 ஆண்டுகளாக பல குறுக்கீடுகளால் முடங்கியது.
இச்சூழலில், சி.எம்.டி.ஏ., எனப்படும் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம், புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, முன்னதாக தேர்வு செய்த இடத்தில், 92 கோடி ரூபாய் மதிப்பில், புதிய பேருந்து நிலையம் அமைக்கிறது.அதன் கட்டுமானப் பணிகள் நடக்கும் நிலையில், சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, சப் - கலெக்டர் நாராயண சர்மாவுடன், ஆய்வு செய்தார்.
பணிகள் குறித்து தனியார் ஒப்பந்த நிறுவனத்தினரிடம் கேட்டறிந்தார். புதிய பேருந்து நிலைய பகுதியிலிருந்து, சிற்ப பகுதிகளான கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள் உள்ளிட்ட பகுதிகள் அமைந்துள்ள தொலைவு குறித்து பார்வையிட்டார். அதற்கான போக்குவரத்து வசதி மற்றும் அதனால் பயணியருக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.








      Dinamalar
      Follow us