/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கோவளம் சதுப்பு நிலத்தில் 1,000 மரக்கன்றுகள் நடவு
/
கோவளம் சதுப்பு நிலத்தில் 1,000 மரக்கன்றுகள் நடவு
ADDED : ஜூலை 28, 2025 01:37 AM

திருப்போரூர்:திருப்போரூர் அருகே, கோவளம் உபரிநீர் கால்வாய் ஓரத்தில் உள்ள சதுப்பு நிலத்தில், 1,000 மரக்கன்றுகள் நடும் விழா, நேற்று நடந்தது.
இந்திய பெருங்கடல் சங்கம், எஸ்.ஆர்.எம்., கல்லுாரி, இந்திய சதுப்பு நில அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு வனத்துறை சார்பில், கோவளம் உபரிநீர் கால்வாய் ஓரத்திலுள்ள சதுப்பு நிலத்தில், 1,000 மரக்கன்றுகள் நடும் விழா, நேற்று நடந்தது.
இதில் சிறப்பு அழைப்பாளராக, திருப்போரூர் வனச்சரக அலுவலர் பொன் செந்தில் பங்கேற்று, முதல் மரக்கன்றை நட்டு துவக்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து பேராசிரியர்கள், மாணவ - மாணவியர் 1,000 மரக்கன்றுகளை நட்டனர். மரக்கன்றுகள் நடும் விழாவில் பங்கேற்ற மாணவர்களுக்கு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கல்லுாரி பேராசிரியர்கள், வனத்துறை அதிகாரிகள், இந்திய பெருங்கடல் சங்கம் மற்றும் சதுப்பு நில அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் என, ஏராளமானோர் பங்கேற்றனர்.