sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

விபத்தில் போலீஸ்காரர் உயிரிழப்பு

/

விபத்தில் போலீஸ்காரர் உயிரிழப்பு

விபத்தில் போலீஸ்காரர் உயிரிழப்பு

விபத்தில் போலீஸ்காரர் உயிரிழப்பு


ADDED : அக் 06, 2024 01:21 AM

Google News

ADDED : அக் 06, 2024 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,எண்ணுார் காவல் நிலையத்தில், போக்குவரத்து பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றியவர் லக்ஷ்மணன், 37. இவர், நேற்று காலை 6:00 மணியளவில், அம்பத்துாரில் நடக்க இருந்த காவல் துறை பயிற்சி அணிவகுப்பில் பங்கேற்க, -மணலி - எண்ணுார் விரைவுச் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.எதிர்பாராத விதமாக, சாலையோரம் நின்ற கிரேன் மீது மோதி விபத்துக்குள்ளானார்.

இதில், பலத்த காயம் அடைந்தவரை, அங்கிருந்தோர் மீட்டு, சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவர், காலை 8:00 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையறிந்த முதல்வர் ஸ்டாலின், அவரது குடும்பத்தினருக்கு 25 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us