/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பாலித்தீன் பை தயாரிப்பு நிறுவன தொழிலாளர்கள் போராட்டம்
/
பாலித்தீன் பை தயாரிப்பு நிறுவன தொழிலாளர்கள் போராட்டம்
பாலித்தீன் பை தயாரிப்பு நிறுவன தொழிலாளர்கள் போராட்டம்
பாலித்தீன் பை தயாரிப்பு நிறுவன தொழிலாளர்கள் போராட்டம்
ADDED : மார் 18, 2025 12:33 AM

மறைமலை நகர்; மறைமலை நகர் அண்ணா சாலையில், விர்கோ பாலிமர் இந்தியா லிமிடெட் என்ற பாலித்தீன் பைகள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
இதில், 90 நிரந்தர பணியாளர்கள் மற்றும் 600க்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.
இதில், நிரந்தர பணியாளர்களுக்கு, 8 மாதங்களாக முறையாக ஊதியம் வழங்காமல், இரண்டு மூன்று தவணைகளாக வழங்கப்பட்டு வருவதாகவும், கடந்த மாதம் வழங்க வேண்டிய சம்பளம், 15 நாட்களுக்கு மட்டுமே வழங்கி உள்ளதாகவும் கூறி, நேற்று காலை தொழிற்சாலை நுழைவு பகுதியில், 90 தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து, தொழிலாளர்கள் கூறியதாவது:
கடந்த 30 ஆண்டுகளாக பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு, முறையான சம்பள உயர்வு வழங்காமல், சம்பளமும் வழங்காமல் நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.
இது குறித்து, தொழிலாளர் நல வாரியத்தில் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை. தற்போது, தொழிற்சாலை நிர்வாகம், வட மாநில தொழிலாளர்களை வேலைக்கு எடுத்துள்ளது.
நிரந்தர பணியாளர்களை வேலையை விட்டு நீக்கும் வகையில், நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.
இந்த போக்கை நிர்வாகம் கைவிட்டு, நிரந்தர பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்கவும், மீண்டும் பணிகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.