/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
போஸ்டர்கள் ஒட்டி அட்டூழியம் செங்கை ரயில்வே பாலம் நாசம்
/
போஸ்டர்கள் ஒட்டி அட்டூழியம் செங்கை ரயில்வே பாலம் நாசம்
போஸ்டர்கள் ஒட்டி அட்டூழியம் செங்கை ரயில்வே பாலம் நாசம்
போஸ்டர்கள் ஒட்டி அட்டூழியம் செங்கை ரயில்வே பாலம் நாசம்
ADDED : பிப் 08, 2025 11:52 PM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு ரயில்வே மேம்பால சுவர்களில் ஒட்டியுள்ள,'போஸ்டர்'களை அப்புறப்படுத்தி, அவற்றை ஒட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.
செங்கல்பட்டு - திருக்கழுக்குன்றம் சாலையில், செங்கல்பட்டு ராட்டிணங்கிணறு பகுதியில், ரயில்வே மேம்பாலம் உள்ளது.
இந்த மேம்பாலத்தின் இருபுறமும் ஓவியங்கள் வரையவும், சாலையின் மையப் பகுதியில் பூத்தொட்டிகள் அமைத்து பராமரிக்கவும், சாலை பாதுகாப்பு நிதியில் ஐந்து லட்சம் ரூபாயை, கடந்த ஆண்டு நெடுஞ்சாலைத் துறைக்கு, அரசு ஒதுக்கீடு செய்தது.
இந்த நிதியில், சாலையின் மையப் பகுதியில் பூந்தொட்டிகள் வைத்து, செடிகள் வளர்க்கப்பட்டன. பாலாத்தின் இருபுறமும் உள்ள சுற்றுச்சுவரில், கோவில் மற்றும் சுற்றுலாத் தலங்கள் பற்றிய ஓவியங்கள் வரையப்பட்டன.
கடந்த சில மாதங்களாக, நெடுஞ்சாலைத் துறையினர் இந்த பாலத்தை முறையாக பராமரிக்காததால், பாலத்தின் சுவர்களில், அரசியல் கட்சியினர் விளம்பங்கள், தனிநபர் பிறந்த நாள், திருமண நாள் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் போஸ்டர் மற்றும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன.
மேம்பால சுவர்களின் அழகை சீர்குலைக்கும் இந்த போஸ்டர்களை அகற்றி, அதை ஒட்டியவர்களுக்கு அபராதம் விதிக்க, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், பூந்தொட்டிகளை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

