/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஜி.எஸ்.டி., சாலையில் பள்ளங்கள் வாகன ஓட்டிகள் கடும் அவதி
/
ஜி.எஸ்.டி., சாலையில் பள்ளங்கள் வாகன ஓட்டிகள் கடும் அவதி
ஜி.எஸ்.டி., சாலையில் பள்ளங்கள் வாகன ஓட்டிகள் கடும் அவதி
ஜி.எஸ்.டி., சாலையில் பள்ளங்கள் வாகன ஓட்டிகள் கடும் அவதி
ADDED : செப் 28, 2025 12:04 AM

மறைமலைநகர்:ஜி.எஸ்.டி., சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை தென்மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சாலை என்பதால் கனரக வாகனங்கள், பேருந்துகள், இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன.
செங்கல்பட்டு பரனுார் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து செட்டி புண்ணியம், பகுதி வரை ஜி.எஸ்.டி., சாலையில் பல இடங்களில் பள்ளம் ஏற்பட்டு உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
பெரும் விபத்து ஏற்படும் முன் சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைக்க நெடுஞ் சாலைதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.