/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மின் அழுத்த குறைபாடு பொன்மாரில் பாதிப்பு
/
மின் அழுத்த குறைபாடு பொன்மாரில் பாதிப்பு
ADDED : நவ 13, 2024 08:00 PM
திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியம், மாம்பாக்கத்திலிருந்து மேடவாக்கம் செல்லும் சாலையில், பொன்மார் ஊராட்சி உள்ளது.
இந்த ஊராட்சியில், ஹவுசிங் போர்டு பகுதி செல்லும் சாலையில் உள்ள வெற்றிவேல் நகர், செல்லியம்மன் நகரில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இந்த குடியிருப்பு பகுதிகளுக்கு, மாம்பாக்கம் துணை மின் நிலையத்தில் இருந்து, மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக, இங்கு வீடுகளுக்கு வினியோகிக்கப்படும் மின்சாரத்தில், குறைந்த அழுத்த மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது.
சில நேரங்களில், உயர் மின் அழுத்தம் ஏற்படும் போது, மின் சாதன பொருட்களை இயக்க முடியவில்லை. மேலும், வீட்டு உபயோக மின் சாதனப்பொருட்கள் பழுதடைந்து விடுகின்றன.
எனவே, இப்பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்து, சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

