/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நெல்லிக்குப்பம்,- மாம்பாக்கத்தில் நாளை 5 மணி நேரம் மின் தடை
/
நெல்லிக்குப்பம்,- மாம்பாக்கத்தில் நாளை 5 மணி நேரம் மின் தடை
நெல்லிக்குப்பம்,- மாம்பாக்கத்தில் நாளை 5 மணி நேரம் மின் தடை
நெல்லிக்குப்பம்,- மாம்பாக்கத்தில் நாளை 5 மணி நேரம் மின் தடை
ADDED : ஜூலை 08, 2025 08:02 PM
நெல்லிக்குப்பம்:நெல்லிக்குப்பம், மாம்பாக்கம் ஆகிய பகுதிகளில் நாளை, 5 மணி நேரம் மின் தடை அறிவிக்கப்பட்டு உள்ளது.
மறைமலை நகர் மின் கோட்டத்திற்கு உட்பட்ட நெல்லிக்குப்பம் 110/33 கே.வி., மற்றும் மாம்பாக்கம் 110/33 -- 11 கே.வி., ஆகிய இரு துணை மின் நிலையங்களில், நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
இதனால் நெல்லிக்குப்பம், இள்ளலுார், அம்மாபேட்டை, கல்வாய் கண்டிகை, வெண்பேடு, கீழூர், தர்மாபுரி, கொட்டமேடு, வெங்கூர், சிறுங்குன்றம், மேலையூர், கொண்டங்கி ஆகிய பகுதிகள்.
கீழ்கல்வாய், மேல்கல்வாய், அஸ்தினாபுரம், பாண்டூர், காயார் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகள்.
மாம்பாக்கம், பொன்மார், வேங்கடமங்கலம், புதுப்பாக்கம், கொளத்துார், கீழக்கோட்டையூர், மேலக்கோட்டையூர், கண்டிகை, வெம்பாக்கம் ஆகிய பகுதிகள்.
கேளம்பாக்கம், தையூர், சாத்தாங்குப்பம், ரத்தினமங்கலம் ஒரு பகுதி, ஓ.எம்.ஆர்., ஒரு பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், நாளை காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை, மின் வினியோகம் நிறுத்தப்படும் என, மறைமலை நகர் மின் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.