/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லை செயல் அலுவலருக்கு உதவி கமிஷனர் பதவி உயர்வு
/
மாமல்லை செயல் அலுவலருக்கு உதவி கமிஷனர் பதவி உயர்வு
மாமல்லை செயல் அலுவலருக்கு உதவி கமிஷனர் பதவி உயர்வு
மாமல்லை செயல் அலுவலருக்கு உதவி கமிஷனர் பதவி உயர்வு
ADDED : அக் 11, 2024 12:05 AM
மாமல்லபுரம்:ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ், மாமல்லபுரத்தில் ஆளவந்தார் அறக்கட்டளை இயங்குகிறது. மாமல்லபுரம் - நெம்மேலி கடலோர பகுதியில், அதற்கு சொந்தமாக, 1,054 ஏக்கர் நிலம் உள்ளது.
இதன் செயல் அலுவலராக, கடந்த 2022 முதல், சக்திவேல் என்பவர் பணிபுரிகிறார். இங்குள்ள ஸ்தலசயன பெருமாள் கோவில் செயல் அலுவலராகவும், கூடுதல் பொறுப்பு வகித்தார்.
தற்போது, பதவி உயர்வில், விழுப்புரம் மாவட்ட உதவி கமிஷனராக நியமித்து, அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. அறக்கட்டளையின் செயல் அலுவலராக பணியாற்றிய கோதண்டராமன், பொன்.சுவாமிநாதன், அசோக்குமார் உள்ளிட்டோர், உதவி கமிஷனராக பதவி உயர்வு பெற்று, தொடர்ந்து இணை கமிஷனராகவும் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.