/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
போராடிய வி.ஏ.ஓ., உதவியாளர்கள் இன்று முதல் பணிக்கு திரும்ப முடிவு
/
போராடிய வி.ஏ.ஓ., உதவியாளர்கள் இன்று முதல் பணிக்கு திரும்ப முடிவு
போராடிய வி.ஏ.ஓ., உதவியாளர்கள் இன்று முதல் பணிக்கு திரும்ப முடிவு
போராடிய வி.ஏ.ஓ., உதவியாளர்கள் இன்று முதல் பணிக்கு திரும்ப முடிவு
ADDED : நவ 11, 2024 02:33 AM

கூடுவாஞ்சேரி,:வண்டலுார் தாலுகா தாசில்தாராக புஷ்பலதா பணியாற்றுகிறார். இவர், தாலுகாவிற்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் உள்ள கிராம நிர்வாக அலுவலகங்களில் ஆய்வு நடத்தினார்.
அப்போது, அங்கு பணியில் இல்லாத கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் உதவியாளர்களிடம் விளக்கம் கேட்டு, ஒழுங்கு - நடவடிக்கை மேற்கொள்வதற்காக, அவர்களுக்கு தாசில்தார் மெமோ வழங்கியிருந்தார்.
இதை கண்டித்து, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம், கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் மற்றும் வருவாய் துறை கிராம உதவியாளர்கள் சங்கம் இணைந்து, வண்டலுார் தாலுகா அலுவலகத்தில், கடந்த 7ம் தேதி உள்ளிருப்பு போராட்டம் துவக்கின.
நேற்று முன்தினம், தாம்பரம் கோட்டாட்சியர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்படாததால், மீண்டும் உள்ளிருப்பு போராட்டம் தொடர்ந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு, தாசில்தார் புஷ்பலதா தலைமையில், துணை வட்டாட்சியர் ரமேஷ், கூடுவாஞ்சேரி குறுவட்ட வருவாய் ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலையில், சங்க நிர்வாகிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அதில், மக்கள் நலன் கருதியும், ஊழியர்கள் நலன் கருதியும், ஊழியர்கள் மீது விரோத போக்கு ஏதும் இன்றி, அரசுக்கும் மக்களுக்கும் சிறப்பான சேவை செய்து, மாவட்ட நிர்வாகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் சிறப்பான பணி புரிவது என, பரஸ்பரமாக ஒப்புக்கொண்டனர்.
அதனை தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தை நிறைவு செய்து, அனைவரும் கலைந்து சென்றனர். அவர்கள் அனைவரும் இன்று முதல் பணிக்கு திரும்ப முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.