/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
துாய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்
/
துாய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்
ADDED : ஜூலை 03, 2025 01:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் வட்டார துாய்மை பணியாளர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் துாய்மை பணிக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன.
அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் கீழ் 59 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கப்பட்டன.
அச்சிறுபாக்கம் ஒன்றிய குழு தலைவர் கண்ணன் துாய்மை பணியாளர்களுக்கு உபகரணங்களை வழங்கினார்.