/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மறைமலைநகரில் பொது இடத்தில் குடிநீர் தொட்டி
/
மறைமலைநகரில் பொது இடத்தில் குடிநீர் தொட்டி
ADDED : மே 10, 2025 01:57 AM
மறைமலைநகர்:மறைமலைநகர் நகராட்சியில் கோடை வெயிலுக்கு, பொது இடங்களில் குடிநீர் தொட்டி அமைத்து, பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் துவக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில், குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என, அதிகாரிகளுக்கு கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவையடுத்து, மறைமலைநகர் நகராட்சியில் மறைமலைநகர், தைலாவரம், பொத்தேரி, காட்டாங்கொளத்துார் ஆகிய பேருந்து நிறுத்தங்களில் இருபுறமும், அண்ணாநகர் சாலையில் காவல் நிலையம் மற்றும் தனியார் வங்கி அருகிலும், தற்காலிகமாக தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டன.
இங்கு, பொதுமக்களுக்கு தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக, நகராட்சி கமிஷனர் ரமேஷ் தெரிவித்தார். இதேபோன்று செங்கல்பட்டு, மதுராந்தகம், மாமல்லபுரம், நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் தண்ணீர் தொட்டி ஏற்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.