/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மருத்துவச்சி குஞ்சம்மாள் சிலைக்கு புஷ்ப அபிஷேகம்
/
மருத்துவச்சி குஞ்சம்மாள் சிலைக்கு புஷ்ப அபிஷேகம்
ADDED : செப் 08, 2024 12:20 AM

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த தாழம்பூரில் திரிசக்தி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் அறங்காவலர் டாக்டர் கே.கே.கிருஷ்ணன்குட்டியின் தாயார் மருத்துவச்சி குஞ்சம்மாளின் மணிமண்டபம், கோவில் வளாகத்தில் உள்ளது. இந்த மணிமண்டபத்தில் அவருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.
குஞ்சம்மாளின் 30ம் ஆண்டு ஜீவசமாதி தினத்தையொட்டி, நேற்று முன்தினம் அவரது சிலைக்கு பல்வேறு பூக்களால் புஷ்ப அபிஷேகம், விசேஷ பூஜை நடந்தது. சுற்றுப்புற மக்கள் மணிமண்டபத்திற்கு வந்து வழிபாடு செய்தனர்.
அதேபோல், கேரள மாநிலம் பாலக்காடு முண்டூர் கணக்கு பரம்பில் உள்ள மருத்துவச்சி குஞ்சம்மாள் ஜீவ சமாதியில் அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தது. நிறைவில் அன்னதானம் வழங்கப்பட்டது.