/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பி.வி.களத்துார் ஊராட்சி அலுவலக கட்டடம் பயன்பாட்டிற்கு வருமா?
/
பி.வி.களத்துார் ஊராட்சி அலுவலக கட்டடம் பயன்பாட்டிற்கு வருமா?
பி.வி.களத்துார் ஊராட்சி அலுவலக கட்டடம் பயன்பாட்டிற்கு வருமா?
பி.வி.களத்துார் ஊராட்சி அலுவலக கட்டடம் பயன்பாட்டிற்கு வருமா?
ADDED : பிப் 14, 2024 10:10 PM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த பொன்விளைந்தகளத்துார் ஊராட்சி அலுவலக கட்டடம் இல்லாமல், அரசுக்கு சொந்தமான கட்டடங்களில், இட நெருக்கடியில் இயங்கி வந்தன.
இங்கு, வீட்டு வரி, குடிநீர் வரி உள்ளிட்டவற்றுக்கு, பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர். ஊராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, கலெக்டர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோரிடம், ஊராட்சி நிர்வாகம் வலியுறுத்தியது.
அதைத் தொடர்ந்து, ஊரக வளர்ச்சித் துறை சார்பில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில், 2020 - -21ம் நிதியாண்டில், 23.45 லட்சம் ரூபாய் மதிப்பில், ஊராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டப்பட்டது.
கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேல் ஆகியும், இதுவரை திறக்கப்படவில்லை. எனவே, ஊராட்சி நிர்வாகத்தின் நலன் கருதி, ஊராட்சி அலுவலக கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.