/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செவிலியரிடம் சில்மிஷம் பணியாளரிடம் விசாரணை
/
செவிலியரிடம் சில்மிஷம் பணியாளரிடம் விசாரணை
ADDED : ஜூலை 29, 2025 11:43 PM
சென்னை, தனியார் மருத்துவமனை செவிலியரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட துாய்மை பணியாளரிடம், போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த, 22 வயது இளம்பெண், சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில், செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் பணியில் இருந்தபோது, அதே மருத்துவமனையில் துாய்மை பணியாளராக பணியாற்றும், வடமாநிலத்தைச் சேர்ந்த ரைகான் மாண்டி, 35, என்பவர், செவிலியரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பெண், மயிலாப்பூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்படி, போலீசார் துாய்மை பணியாளரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.