/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சார்- பதிவாளர் அலுவலகத்தில் 'ரெய்டு'
/
சார்- பதிவாளர் அலுவலகத்தில் 'ரெய்டு'
ADDED : அக் 15, 2025 10:15 PM
திருப்போரூர்: திருப்போரூர் பேரூராட்சி, கந்தசுவாமி கோவில் தெற்கு மாடவீதியில், சார்- - பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது.
தமிழகத்திலேயே அதிக வருவாய் அளிக்கும் சார் - - பதிவாளர் அலுவலகமாக முதலிடத்தில் திருப்போரூர் இருந்தது. இதனால், பரபரப்புடன் காணப்பட்டு அடிக்கடி லஞ்ச ஒழிப்பு சோதனையும் நடந்தது.
இந்நிலையில், கூட்ட நெரிசல் போன்ற பல்வேறு காரணங்களால், திருப்போரூர் சார் -- பதிவாளர் அலுவலகத்தை பிரிக்க, அரசு முடிவு செய்தது.
அதன்படி, திருப்போரூர் சார்- - பதிவாளர் அலுவலகத்தை பிரித்து கேளம்பாக்கத்தில் கடந்த ஆக.,1 ம் தேதி முதல் புதிதாக செயல்பட்டு வருகிறது.
திருப்போரூரில் இருந்த பரபரப்பு கேளம்பாக்கம் சார்- பதிவாளர் அலுவலகத்தில் திரும்பியது.
கேளம்பாக்கம் சார்- பதிவாளர் அலுவலகத்தில், நேற்று மாலை டி.எஸ்.பி., சரவணன் தலைமையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.