ADDED : அக் 15, 2025 10:15 PM
மாமல்லபுரம்: குழிப்பாந்தண்டலம் ஊராட்சியில், உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது.
திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகலைச்செல்வன், மாமல்லபுரம் வருவாய் ஆய்வாளர் புஷ்பராஜ், பிற துறையினர் பங்கேற்றனர். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்ந்த 235, மகளிர் உரிமைத் தொகை சார்ந்த 225, வேளாண்மை, உழவர் நலத்துறை சார்ந்த 44, ஊரக வளர்ச்சி சார்ந்த 38, மாற்றுத்திறனாளிகள் ஏழு உள்ளிட்ட, 655 பேர் மனுக்கள் அளித்தனர்.
அச்சிறுபாக்கம் ஒன்றியம், பெரும்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் மனோகர், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம், அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனுவாசன், ஜெயக்குமார் முன்னிலையில், பெரும்பாக்கத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம், நடந்தது.
இதில், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மை, கூட்டுறவு உள்ளிட்ட 15 துறைகள் மூலமாக, 46 சேவைகள் வழங்கப்பட்டன.
வீட்டுமனைப் பட்டா, மகளிர் உரிமைத்தொகை, தொகுப்பு வீடு, மின் இணைப்பு, ஆதார் அட்டை, மருத்துவ காப்பீடு அட்டை, குடும்ப அட்டை என, பல்வேறு கோரிக்கைகளை மக்கள் மனுவாக, துறை சார்ந்த அதிகாரிகளிடம் வழங்கினர். 600-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.